கட்சி மேலிடம் உத்தரவின்பேரில் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட்டை விட்டு விலகி உள்ளேன் ஈசுவரப்பா பேட்டி
கட்சி மேலிடம் உத்தரவின்பேரில் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை விட்டு விலகி உள்ளேன் என்று ஈசுவரப்பா கூறினார். ஈசுவரப்பா பேட்டி கர்நாடக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மேல்–சபை எதிர்கட்சி தலைவருமான ஈசுவரப்பா நேற்று முன்தினம் சிவமொக்காவில் நிருபர்க
சிவமொக்கா,
கட்சி மேலிடம் உத்தரவின்பேரில் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை விட்டு விலகி உள்ளேன் என்று ஈசுவரப்பா கூறினார்.
ஈசுவரப்பா பேட்டிகர்நாடக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மேல்–சபை எதிர்கட்சி தலைவருமான ஈசுவரப்பா நேற்று முன்தினம் சிவமொக்காவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கர்நாடக சட்டமன்ற மேலவை தலைவராக உள்ள சங்கரப்பாவை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த பதவியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரை அமர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. எடியூரப்பா ஆதிதிராவிடர்கள் வீடுகளில் உணவு சாப்பிடுவதை அரசியலாக்க காங்கிரசார் முயற்சி செய்கின்றனர்.
நான் ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தான் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் என்ற அமைப்பை தொடங்கினேன்.
கட்சியின் மேலிடம் உத்தரவுஆனால் அந்த அமைப்பின் மூலம் பிரச்சினைகள் வருவதால், அந்த அமைப்பில் இருந்து விலகும்படி எனக்கு கட்சியின் மேலிடம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தான் நான் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட்டில் இருந்து விலகி உள்ளேன்.
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலை நாங்கள் எடியூரப்பா தலைமையில் சந்திப்போம். 150–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும். கர்நாடகத்தில் மீண்டும் தாமரை மலருவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.