தீபா மீதான தாக்குதலை கண்டித்து கரூரில் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


தீபா மீதான தாக்குதலை கண்டித்து கரூரில் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2017 4:15 AM IST (Updated: 12 Jun 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

தீபா மீதான தாக்குதலை கண்டித்து கரூரில் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

கரூர்,

மறைந்த ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்கு நேற்று காலை அவரது அண்ணன் மகளான தீபா சென்றார். அப்போது தீபா தன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த நிலையில் தீபா மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி கரூரில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் நேற்று மாலை பஸ் நிலையம் அருகே கோவை ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் வி.கே.துரைசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தீபாவை தாக்கியவர்களை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பினர். இதில் தீபா பேரவை நிர்வாகிகள் பெரியசாமி, சுப்ரமணியன், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story