டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடிய 3 சிறுவர்கள் கைது
பாடாலூர் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடிய 3 சிறுவர்கள் கைது
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆலத்தூர் கேட்டில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பிரகாஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு பிரகாஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 300-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் ஏரிக்கரையில் பாடாலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் துறைமங்கலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆலத்தூர்கேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story