தன்னார்வத்துடன் பெரியாறு கால்வாயை சுத்தம் செய்த இளைஞர்கள்
மேலூரில் குப்பைகளால் நிறைந்து கிடக்கும் பெரியாறு கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வத்துடன் இளைஞர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட்டனர்.
மேலூர்,
மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் விவசாயத்தை சார்ந்துள்ளது. இதற்காக இந்த பகுதி விவசாயிகள் வைகை பெரியாறு கால்வாயை மட்டுமே நம்பி உள்ளனர். இந்த கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், குவிந்துள்ள குப்பைகளையும் பொதுப்பணித்துறை அகற்ற வேண்டியது அவசியம். ஆனால் தண்ணீர் வரும் காலங்களில் மட்டும், அவர்கள் பெயரளவிற்கு அதில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக மேலூர் நகர் வழியாக செல்லும் பெரியாறு கால்வாயில், அந்த பகுதியில் கடை வைத்துள்ளவர்கள், குடியிருப்பு வாசிகள் என அனைவரும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அதில் அதிக அளவு பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து விடுகின்றன. இதனால் தண்ணீர் வரும் காலங்களில் இந்த பிளாஸ்டிக் அடித்து செல்லப்பட்டு வயல்களில் தங்கி விடுகின்றன. இவற்றால் நிலத்தின் தன்மை கெட்டு விடுகிறது. மேலும் அங்கு மேயும் கால்நடைகளும் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு இறந்து போகின்றன.
தன்னார்வ இளைஞர்கள்
இதை கண்ட மேலூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து நேற்று பெரியாறு கால்வாயில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் முட்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் என்ஜினீயரிங் உள்பட படிப்புகள் படித்து, பல்வேறு இடங்களில் பணியில் உள்ள இவர்கள் காண்டீவா அறக்கட்டளை என்ற பெயரில் நல பணிகளை இலவசமாக செய்து வருகின்றனர். தலைவர், செயலாளர் என தனித்தனியாக பொறுப்புகள் இல்லாத இந்த அமைப்பில் அனைவரும் சமமாக நடத்தப்படுகின்றனர்.
நேற்று நடைபெற்ற இந்த சுத்தம் செய்யும் பணியில் நிர்மல்குமார், சாகர், வெங்கட்ராம், ஜான்பீட்டர், ஹரீஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Tags :
Next Story