மாடு விற்க நிபந்தனையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்


மாடு விற்க நிபந்தனையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2017 4:00 AM IST (Updated: 12 Jun 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

மாடு விற்க நிபந்தனையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர்,

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக் கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பழனிக்குமார் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. லிங்கம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டும், சாதி ஆவண படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமை க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் சீனிவாசன், வட்ட செயலாளர் பாலமுருகன், நகர செயலாளர் காதர் முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story