தீ விபத்து: 7 கூரை வீடுகள் எரிந்து நாசம் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின
மயிலாடுதுறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீ விபத்தின் போது கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அறுபத்து மூவர்பேட்டை அக்களூர் பகுதியை சேர்ந்தவர் கலா. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ பரவி அவரது வீட்டுக்கு அருகே உள்ள குணா, ஜோதி, ஜெயலட்சுமி, பார்வதி, சாந்தி, மணிகண்டன் ஆகியோரின் கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்தின் போது குணா, ஜெயலட்சுமி ஆகியோரின் வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால் மேலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
ரூ.7லட்சம் பொருட்கள்
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முனியாண்டி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் ரூ.7 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story