வைரஸ், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
வைரஸ், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்களுக்கு, கலெக்டர் கதிரவன் அறிவுரை வழங்கினார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் கொம்பேப்பள்ளி, உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, துப்புகானப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 16 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார். தொடர்ந்து சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார ஆய்வாளர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது:-
வைரஸ், டெங்கு காய்ச்சல்
தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பு வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க வேண்டும். இதற்காக சுகாதார துறை ஆய்வாளர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று நீர்சேமிப்பு தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் ஆகியவற்றில் நீர் தேங்குவதை கண்காணிக்க வேண்டும்.
குளோரின் கலவை தெளிக்க வேண்டும். மேலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். சிறப்பு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்பவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நற்சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் மாது, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரபாஸ்கர், அன்னபூரணி, உதவி பொறியாளர்கள் சுமதி, குமார், தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story