மீன்பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதையொட்டி விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குளச்சல்,
ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் தமிழக கடற்பகுதியை கிழக்கு மற்றும் மேற்காக பிரித்து விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த ஏப்ரல் 15–ந் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இந்த தடைக்காலம் வருகிற 14–ந் தேதியுடன் முடிகிறது.
மேற்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 1–ந் தேதி முதல் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இந்த தடை காலம் ஜூலை 31–ந் தேதி வரை அமலில் இருக்கும். இதையொட்டி விசை படகுகள் எதுவும் கடலுக்கு செல்லவில்லை. குறிப்பாக குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதிகளான கோவளம், மணக்குடி, ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், முட்டம், கடியப்பட்டினம், குளச்சல், குறும்பனை, மேல்மிடாலம், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, தூத்தூர், நீரோடி வரையிலான கிராமங்களில் விசை படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
உபகரணங்கள் சீரமைப்பு
தடைக்காலத்தையொட்டி குளச்சல் பகுதியில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, படகுகளுக்கு வர்ணம் பூசுதல், வலைகளில் படிந்துள்ள பாசியை அகற்றி உலர்த்தி கட்டி வைத்தல், படகு மோட்டார்களை சரிபார்த்தல் போன்ற பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :
Next Story