செயல் அதிகாரி பதவிக்கான எழுத்துத்தேர்வு: 1,055 பேர் தேர்வு எழுதினார்கள்
செயல் அதிகாரி பதவிக்கான எழுத்துத்தேர்வு திருப்பூரில் நடைபெற்றது. இதில் 1,055 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். 1,151 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திருப்பூர்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் செயல் அதிகாரி கிரேடு-3, கிரேடு-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று செயல் அதிகாரிக்கான கிரேடு-4-க்கான எழுத்துத்தேர்வு திருப்பூர் குமரன் கல்லூரி, எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரி ஆகிய 2 மையங்களில் நடைபெற்றது.
தேர்வு மையங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். தேர்வு மையங்களின் பாதுகாப்பு மற்றும் இதர விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். திருப்பூர் தெற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
1,151 பேர் தேர்வு எழுத வரவில்லை
நேற்று நடந்த இந்த தேர்வுக்கு திருப்பூர் மாவட்டத்தில் 1,276 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 600 பேர் தேர்வு எழுதினார்கள். 676 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் நேற்று முன்தினம் திருப்பூர் குமரன் கல்லூரியில் செயல் அதிகாரி கிரேடு-3-க் கான எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு மாவட்டத்தில் 930 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 455 பேர் தேர்வு எழுதினார்கள். 475 பேர் தேர்வு எழுத வரவில்லை. இரண்டு தேர்வுக்கும் மாவட்டத்தில் 2,206 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,055 பேர் தேர்வு எழுதினார்கள். 1,151 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Related Tags :
Next Story