மும்பையில் இருந்து சென்ற தனியார் சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 9 பயணிகள் சாவு 27 பேர் படுகாயம்
மும்பையில் இருந்து சென்ற தனியார் சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த பயங்கர விபத்தில் 9 பயணிகள் பலியானார்கள். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,

தனியார் சொகுசு பஸ்
மும்பையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு தனியார் சொகுசு பஸ் ஒன்று லாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை பீட் மாவட்டம் ஆஸ்டி தாலுகாவில் உள்ள தனோரோ என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அடுத்த நொடியே பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பயணிகள் அலறல்
இந்த கோர விபத்தில் பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி அலறினார்கள். பஸ்சுக்குள் இருக்கை மற்றும் கம்பிகளில் மோதி பயணிகள் படுகாயம் அடைந்து துடித்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். விபத்து பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ்களும் வந்து சேர்ந்தன. பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
9 பேர் சாவு
விபத்தில் சிக்கிய பஸ்சில் இருந்து 2 பெண்கள் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே படுகாயம் அடைந்த பயணிகள் அகமதுநகர் மற்றும் புனேயில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில், ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
இதன் காரணமாக சாவு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது.
27 பேர் படுகாயம்
படுகாயத்துடன் 27 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த விபத்தில் ஒருவரின் உடலை தவிர மற்ற 8 பேரின் உடல்களும் உடனடியாக அடையாளம் காணப்பட்டன.
அவர்களது பெயர் யோகேஷ் தாக்லே(வயது30), ரஷீத் குரேஷி(60), அனில் பதான்(32), மெருனிஷா பட்டேல்(35), ஆசிமா செய்யது(45), சார்ஜே ராவ் பவார்(30), பதான் பகதூர் இஸ்மாயில்(60), சுனில் கோமத்வார் என்பது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் லாத்தூர், பீட், ஆஸ்தி, அம்பேஜோகாவ் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர், பஸ்சை அதிக வேகத்தில் ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுபற்றி அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்றொரு விபத்து
இதேபோல பீட் ஜாட்டேகாவ் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த சுதர்சன், சுக்சாகர் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பலியான இரண்டு தொழிலாளர்களும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது.

Related Tags :
Next Story