மராட்டியத்தில் ரூ.30 ஆயிரம் கோடி பயிர்கடன் தள்ளுபடி அரசு உறுதிமொழியை தொடர்ந்து இன்று நடைபெற இருந்த போராட்டங்கள் வாபஸ்


மராட்டியத்தில் ரூ.30 ஆயிரம் கோடி பயிர்கடன் தள்ளுபடி அரசு உறுதிமொழியை தொடர்ந்து இன்று நடைபெற இருந்த போராட்டங்கள் வாபஸ்
x
தினத்தந்தி 12 Jun 2017 4:00 AM IST (Updated: 12 Jun 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி பயிர்கடன் தள்ளுபடி வழக்குவதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த பேராட்டங்களை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன. விவசாயிகள் போராட்டம் பயிர்க்கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமா

மும்பை,

மராட்டியத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி பயிர்கடன் தள்ளுபடி வழக்குவதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த பேராட்டங்களை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன.

விவசாயிகள் போராட்டம்

பயிர்க்கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை நிர்ணயம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1–ந் தேதிமுதல் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனாவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. விவசாயிகளின் இந்த போராட்டம் காரணமாக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் 11–ந் தேதிக்குள் அரசு பயிர்கடன் தள்ளுபடி செய்யவிட்டால் சாலை மறியல், ரெயில் மறியல் என போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என விவசாயிகள் கெடு விதித்து இருந்தனர்.

அறிவிப்பு

இதையடுத்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தார். மேலும் விவசாயிகள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் 6 மந்திரிகள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்தார். இந்த குழுவை சேர்ந்தவர்கள் நேற்று விவசாய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மந்திரிகளிடம் எடுத்துறைத்தனர். அப்போது மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார்.

அதுமட்டும் அல்லாமல் முழுமையான கடன் தள்ளுபடி குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்தார்.

முதல்–மந்திரி

இந்த நிலையில் நேற்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பை வெளியிட்டார். இதில், ‘‘ மராட்டியத்தில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் கடன் தள்ளுபடி தகுதியானவர்கள் ஆகிறார்கள். இந்த கடன் தள்ளுபடியால் மாநில பட்ஜெட்டில் அரசுக்கு மேலும் ரூ.30 ஆயிரம் கோடி நிதி சுமை ஏற்படும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இதன்மூலம் சிறு, குறு விவசாயிகள் பயிர்கடன் சுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

போராட்டம் வாபஸ்

இந்த நிலையில் மந்திரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விவசாயிகள் குழுவில் இடம்பெற்றிருந்த விவசாய தலைவரும், எம்.பி.யுமான ராஜூ செட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:–

விவசாயிகள் கோரிக்கை ஏற்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எனவே நாங்கள் அறிவித்திருந்த சாலை மறியல், ரெயில் மறியல், முற்றுகை போராட்டங்களை தற்காலிகமான வாபஸ் பெற்றுக்கொள்கிறோர்.

இருப்பினும் முழுமையான பயிர்கடன் தள்ளுபடி குறித்து முடிவு செய்ய குழு அமைப்பதாக மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் உடனடியாக குழு அமைத்து, வரும் 25–ந் தேதிக்குள் தங்கள் முடிவை வெளியிடவேண்டும். இல்லையனில் கூறியபடி மீட்டும் போராட்டம் வெடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story