தூர்வாரி ஆழப்படுத்தும் வகையில் பேரூர் குளத்தில் வண்டல்மண் அள்ளும் விவசாயிகள்
தூர்வாரி ஆழப்படுத்தும் வகையில் பேரூர் குளத்தில் விவசாயிகள் வண்டல்மண் அள்ளுகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களில், விவசாயிகள் வண்டல் மண் அள்ள மாவட்ட கலெக்டர் ஹரிகரன் அனுமதி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் வேடப்பட்டி குளம், உக்குளத்தில் வண்டல் மண் அள்ளும் பணி நடை பெற்றது. குளங்களில் அள்ளப் படும் வண்டல் மண், லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விவசாய நிலங்களில் கொட்டப்படு கிறது. தற்போது பேரூர் குளத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் வண்டல் மண் அள்ளும் பணி நடை பெற்று வருகிறது.
இது குறித்து விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது-
பேரூர் குளத்தில் 15 பொக்லைன் எந்திரங்கள் மூலம் வண்டல் மண் அள்ளப்பட்டு, 50 லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குளத்தில் 10 அடி ஆழத்துக்கு வண்டல் மண் உள்ளது. இங்கு மண் அள்ள தாமதமாக அனுமதி அளித்து உள்ளனர். எனவே ஆண்டு முழுவதும் குளத்தில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
நிலத்தடி நீர்மட்டம்
குளம் தூர்வாருவதை போல், வண்டல் மண் அள்ளும் பணி நடைபெறுகிறது. இதன் மூலம் குளங் களில் கூடுதல் தண்ணீர் சேமிக்க வாய்ப்பு உள்ளது. கோவையை சுற்றி உள்ள குளங்களில் நீர் மட்டம் குறைந்ததால் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி மணிகண்டன் கூறுகையில், எங்கள் அமைப்பு சார்பில் பேரூர் குளத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், கருவேல மரங்கள், முட்புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. செல்வசிந்தாமணி குளம், வெள்ளலூர் குளம், செங்குளத்திலும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவையை சுற்றி உள்ள நீர்நிலை களை பாதுகாத்தால் மட்டுமே நகரில் நிலத்தடி நீர்மட்டம் கீழே செல்லாமல் தடுக்க முடியும் என்றார்.
வாலாங்குளம்
கோவை வாலாங்குளத்தில் சிறுதுளி அமைப்பு சார்பில் குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வரு கிறது. இந்த குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த குளத்துக்கு போதிய அளவு தண்ணீர் வராததால் குளம் வறண்டு கிடக்கிறது.

Related Tags :
Next Story