பழனியில் தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை பொதுமக்கள் அச்சம்


பழனியில் தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 12 Jun 2017 3:38 AM IST (Updated: 12 Jun 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், தென்னை மரங்களை காட்டு யானைசேதப்படுத்தியது. தொடர்ந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பழனி,

பழனி- கொடைக்கானல் சாலையில் உள்ளது அண்ணாநகர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான இங்கு தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள் உள்ளன. இந்தநிலையில் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து வருகின்றன.

வீடுகளை சேதப்படுத்துவதோடு, விவசாய பயிர்களையும் நாசப்படுத்தி செல்கின்றன. இதனை வனத்துறையினர் விரட்டும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது. இருந்தபோதிலும் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் காட்டு யானை ஒன்று புகுந்தது.

பொதுமக்கள் அச்சம்

பின்னர் சரவணன் என்பவருடைய மாந்தோப்புக்குள் புகுந்து மரக்கிளைகளை சேதப்படுத்தியது. மேலும் அங்கு உள்ள வைக்கோல் படப்பையும் சேதப்படுத்தியது. பின்னர் அருகில் உள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்து தென்னை மரங் களை வேரோடு பிடுங்கி எறிந்தது.
சுமார் 2 மணி நேரம் அங்கும், இங்குமாக சுற்றி வந்த காட்டுயானை, தானாக அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சமீப காலமாக காட்டு யானை ஒன்று தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. அதனை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என்று வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து காட்டுயானை அட்டகாசம் செய்து வருவதால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே காட்டு யானை புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story