மும்பை– புனே விரைவு சாலையில் நிலச்சரிவை தடுக்க ரூ.200 கோடி செலவில் திட்டம்
மும்பை– புனே விரைவு சாலையில் நிலச்சரிவை தடுக்க ரூ.200 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை– புனே விரைவு சாலையில் நிலச்சரிவை தடுக்க ரூ.200 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு பாதிப்புமும்பை– புனே விரைவு நெடுஞ்சாலை கடந்த 2002–ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. சுமார் 100 கி.மீ. நீளமுள்ள இந்த சாலை அதிகளவு மலை பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
கடந்த 2015–ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையில் சென்று கொண்டு இருந்த 3 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள்.
ரூ.200 கோடி திட்டம்இதையடுத்து மும்பை– புனே விரைவு சாலையில் நிலச்சரிவை தடுக்க மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் மும்பை– புனே விரைவு சாலையில் நிலச்சரிவு ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்க மாநில சாலை மேம்பாட்டு கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.200 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்யுமாறு மாநில சாலை போக்குவரத்து கழகம் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் எழுதி உள்ளதாக எம்.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இணை இயக்குனர் கிரண் குருந்துகர் கூறினார்.