பாலிடெக்னிக் தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 3 பேர் கைது
பாலிடெக்னிக் தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் வாரியத் தேர்வு நடந்தது. ஏப்ரல் 19-ந் தேதி எஸ்.ஓ.எம் (ஸ்டெர்ன்த் அப் மெட்டீரியல்) தேர்வு நடந்தது.
இந்த நிலையில் தேர்வுக்கு முதல்நாளான 18-ந் தேதி எஸ்.ஓ.எம். தேர்வின் வினாத்தாள் என்று ஆரணியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ‘வாட்ஸ் அப்’பில் வெளியானது. இதுகுறித்து அந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் அவரது பேராசிரியருக்கு தகவல் தெரிவித்தார். அவரும் ‘வாட்ஸ் அப்’பில் வினாத்தாள் வந்த விவரம் குறித்து கல்லூரி முதல்வர் ஆறுமுகத்திடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் ‘வாட்ஸ் அப்’பில் வந்த வினாத்தாளையும், மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த வினாத்தாளையும் சரிபார்த்தார். அப்போது 2 வினாத்தாள்களும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
இதுகுறித்து முதல்வர் ஆறுமுகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ‘வாட்ஸ்அப்’பில் வெளியான வினாத்தாளை மாணவர்கள் மற்றவர்களுக்கும் அனுப்பியிருந்தனர். அதனால் வினாத்தாளை முதலில் யாருடைய ’வாட்ஸ் அப்’பில் இருந்து அனுப்பியது என கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து டி.ஐ.ஜி.க்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த மாதம் 23-ந் தேதி சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு மாற்றப்பட்டது.
அதையடுத்து வினாத்தாளை வெளியிட்ட நபர்களை பிடிக்க வேலூர் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் போலீசார் குமரவேல், சத்யநாராயணன், கோபால், வெங்கடேசன், செந்தில் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
குழுவினர், ஆரணியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ‘வாட்ஸ் அப்’பில் ஆரணியை சேர்ந்த மாணவனுக்கு தேர்வு வினாத்தாளை அனுப்பியது தெரியவந்தது.
கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 3 பேர் கைது
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடலூருக்கு சென்று தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் வினோத்குமார் (வயது 45), பேராசிரியர்கள் மது (29), அம்பாசங்கர் (32), உதவியாளர் ராஜேஷ் (30) ஆகியோர் இந்த வினாத்தாளை வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து பேராசிரியர்கள் மது, அம்பாசங்கர், ராஜேஷ் ஆகிய 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி.போலீசார் கைது செய்தனர். பின்னர் போளூர் நீதிமன்றத்தில் 3 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய கல்லூரி துணை முதல்வர் வினோத்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story