லட்சத்தீவில் ஆசிரியர் பணி


லட்சத்தீவில் ஆசிரியர் பணி
x
தினத்தந்தி 12 Jun 2017 12:41 PM IST (Updated: 12 Jun 2017 12:41 PM IST)
t-max-icont-min-icon

லட்சத்தீவை பூர்விகமாக கொண்ட, முதுநிலை படிப்புடன், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ், லட்சத்தீவு நிர்வாக கல்வி இயக்குனரகம் செயல்படுகிறது. தற்போது இங்கு முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் சி.பி.எஸ்.சி. கல்வி வாரிய பள்ளிகளில் 9,10,11,12–ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த பணி நியமனம் செய்யப்படுவார்கள். லட்சத்தீவை பூர்விகமாக கொண்ட, முதுநிலை படிப்புடன், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆங்கிலம், மலையாளம், இந்தி, அரபி, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், கணிதவியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், வணிகவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் ஆகிய பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. 

முதுநிலை படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பி.யெட் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், பட்டப்படிப்புடன் பி.ஜி.டி.சி.ஏ. படித்தவர்களுக்கும் வாய்ப்புள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ்களை சான்றொப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள், லட்சத்தீவு கல்வி இயக்குனர் அலுவலகத்தை 15–6–2017–ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி, இசை ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிக்கு 39 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு 33 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். உடற்கல்வியியல், இசை மற்றும் ஓவியம் தொடர்பாக இளநிலை கல்வி, டிப்ளமோ கல்வி படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. தகுதி உள்ளவர்கள், 15–6–2017–ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

இது பற்றிய விவரங்களை www.lakshadweep.nic.in இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story