டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள்


டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள்
x
தினத்தந்தி 12 Jun 2017 1:25 PM IST (Updated: 12 Jun 2017 1:25 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் ஏராளமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


இது பற்றிய விவரம் வருமாறு:–

டெல்லி பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். தற்போது இந்த பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்படும் பல்வேறு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மைத்ரேயி கல்லூரியில் 67 பணியிடங்களும், அரபிந்தோ கல்லூரியில் 67 பணியிடங்களும், பாஸ்கராச்சாரியா கல்லூரியில் 31 பணியிடங்களும், லட்சுமிபாய் கல்லூரியில் 65 இடங்களும், டெல்லி கலை அறிவியல் கல்லூரியில் 39 பணியிடங்களும் உள்ளன.

மைத்ரேயி கல்லூரி

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல் படும் மைத்ரேயி கல்லூரி, ஏ–கிரேடு அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். தற்போது இந்த கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தாவரவியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, வரலாறு, கணிதம், இயற்பியல், அரசியல் அறிவியல், பஞ்சாபி, சமஸ்கிருதம், சமூகவியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. இட ஒதுக்கீடு வாரியான மற்றும் பாடப்பிரிவு வாரியான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் ஷ்ஷ்ஷ்.னீணீவீtக்ஷீமீஹ்வீ.ணீநீ.வீஸீ என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 17–6–2017–ந் தேதியாகும்.

அரபிந்தோ கல்லூரி

மற்றொரு டெல்லி பல்கலைக்கழக கல்லூரியான அரபிந்தோ கல்லூரியிலும் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 14 பாடப் பிரிவுகளில் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் ஷ்ஷ்ஷ்.ணீuக்ஷீஷீதீவீஸீபீஷீ.பீu.ணீநீ.வீஸீ என்ற இணையதள பக்கத்தில் விரிவான விவரங்களைப் பார்க்கலாம். அறிவிப்பில் இருந்து 2 வாரங்களுக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பாஸ்கராச்சாரியா கல்லூரி

டெல்லி பாஸ்கராச்சாரியா கல்லூரியில் 31 பேர் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். பயோமெடிக்கல் சயின்ஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், புட் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமென்டேசன், மைக்ரோபயாலஜி, பிசிக்ஸ், பாலிமர் சயின்ஸ் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன. விண்ணப்பிப்பதற்கான தகுதி விவரங்களை   ஷ்ஷ்ஷ்.தீநீணீs.பீu.ணீஸீ.வீஸீ   என்ற இணையதள முகவரியில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும்.  அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

லட்சுமிபாய் கல்லூரி

டெல்லி அசோக் விகார் பகுதியில் செயல் படும் லட்சுமிபாய் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு 65 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வணிகவியல், பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, வரலாறு, ஹோம் சயின்ஸ், பிலாசபி, பொலிடிகல் சயின்ஸ், சமஸ்கிருதம், சமூகவியல், இ.வி.எஸ். போன்ற பிரிவில் பணிகள் உள்ளன. 

விருப்பம் உள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை   றீணீளீsலீனீவீதீணீவீநீஷீறீறீமீரீமீ.வீஸீ   என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 18–6–2017–ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 

கலை அறிவியல் கல்லூரி

டெல்லி நேதாஜி நகரில் செயல்படும் டெல்லி கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு 39 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். வணிகவியல், கணினி அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம், இதழியல், இந்தி, கணிதவியல், அரசியல் அறிவியல் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை   லீttஜீ://பீநீணீநீ.பீu.ணீநீ.வீஸீ   என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 17–6–2017–ந் தேதியாகும். 

இது பற்றிய அறிவிப்புகளை ஜூன் 3–9–ந் தேதி எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம்.

Next Story