கடலூர் துறைமுகத்தை ராட்சத எந்திரம் மூலம் ஆழப்படுத்தும் பணி தொடக்கம்
கடலூர் துறைமுகத்தை ரூ.3½ கோடி செலவில் ராட்சத எந்திரம் மூலம் ஆழப்படுத்தும் பணி தொடங்கியது.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நூற்றுக்கும் அதிகமான விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். சராசரியாக நாள் ஒன்றுக்கு 100 டன் அளவுக்கு மீன் வரத்து இருக்கும்.இந்நிலையில் கடலூர் துறைமுக முகத்துவாரத்தில் அடிக்கடி மணல் மேடுகள் உருவாகி, ராட்சத அலைகளில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியும், கவிழ்ந்தும் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு சிங்காரத்தோப்பு உப்பனாறு பாலத்தில் இருந்து முகத்துவாரம் வரை தூர்வாரி ஆழப்படுத்த தமிழக அரசு ரூ.3½ கோடி நிதி ஒதுக்கியது.
ஆழப்படுத்தும் பணி தொடக்கம்
அந்த நிதியில் இருந்து முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக தண்ணீரில் மிதந்தபடி ஆழப்படுத்தும் வகையில் ராட்சத எந்திரம் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டு ஏற்கனவே முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த எந்திரம் மூலம் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. உப்பனாற்றில் 15 அடி ஆழமும், 50 மீட்டர் அகலமும், முகத்துவாரம் வரை 1500 மீட்டர் தூரம் ஆழப்படுத்தும் பணி நடக்கிறது. ராட்சத குழாய் மூலம் மணலுடன் தண்ணீரை உறிஞ்சி வெளியே எடுத்து ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை 6 மாத காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி முடிந்தால் எவ்வித சிரமமும் இன்றி கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவோம் என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story