திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 13 Jun 2017 4:45 AM IST (Updated: 13 Jun 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

விழுப்புரம்,

செஞ்சி அருகே டட் நகர் என்ற கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணுக்கும், டி.கூடலூரை சேர்ந்த விஜயகுமாருக்கும் (26) பழக்கம் ஏற்பட்டது. அப்போது விஜய குமார், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்தார்.

இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜயகுமாரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு, தொடர்ந்து வற்புறுத்தி கேட்டால் நீ குளிக்கும்போது எடுத்த வீடியோவை முகநூலில் பரப்பி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

வாலிபருக்கு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கடந்த 18.7.15 அன்று செஞ்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட்புஷ்பா, குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story