பெரியகுளம் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் தாசில்தாரிடம், விவசாயிகள் கோரிக்கை


பெரியகுளம் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் தாசில்தாரிடம், விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே பெரியகுளம் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் தாசில்தாரிடம், விவசாயிகள் கோரிக்கை

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் அருகே பெரியகுளம் ஊராட்சியில் பெரியகுளம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம், அந்த பகுதியில் உள்ள 437 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது. இந்த நிலையில் அந்த ஏரியில் மூழ்கடை பகுதியில் தனி நபர் ஒருவர் மண் கொட்டியும், கரை அமைத்தும் தண்ணீர் தேங்க விடாமல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்ப்பாசனம் எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதி விவசாயிகள் நேற்று ஒன்று திரண்டு சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்ற அவர், பெரியகுளம் ஏரிக்கு நேரில் வந்து விசாரணை நடத்துவதாக விவசாயிகளிடம் தெரிவித்தார். 

Related Tags :
Next Story