விசைப்படகுகளின் தரம் பற்றி அதிகாரிகள் ஆய்வு
ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகளின் தரம் பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம்,
தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைய உள்ளதால் ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மீன்துறை அதிகாரிகளை கொண்ட 25 குழு விசைப்படகுகளை பரிசோதித்து வருகிறது. இதன்படி ராமேசுவரத்தில் தயார் நிலையில் உள்ள படகுகளின் தரம், மராமத்து பணிகளின் விவரம், அரசின் உத்தரவுப்படி வர்ணங்கள், பதிவு எண்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மீன்துறை உதவி இயக்குனர் கொளஞ்சிநாதன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேசுவரம் பகுதியில் சனி, திங்கள், புதன் ஆகிய 3 நாட்கள் மட்டுமே விசைப்படகுகள் கடலுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் 61 நாட்கள் தடைக்காலம் நாளை (புதன்கிழமை) வரை உள்ளதால் அடுத்து அவர்கள் சனிக்கிழமை தான் கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் தாங்கள் நீண்டகாலமாக கடலுக்கு செல்லாமல் உள்ளதால் தடைக்காலம் முடிவடையும் மறுநாளான வியாழக்கிழமையே கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
இதையடுத்து இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க் கிழமை) மீன்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவின்படி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story