குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தை தொழிலாளர்கள் முறையை அகற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

ஈரோடு,

இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு கலெக்டர் உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள் திரும்ப கூறி உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆவின் பொதுமேலாளர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story