டாஸ்மாக் கடையை அகற்ற மாணவ–மாணவிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்
வெள்ளித்திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவ –மாணவிகள் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்த மாணவ –மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 25–க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
வெள்ளித்திருப்பூர் பகுதியில் 1,000–த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரின் மத்திய பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுவை குடித்துவிட்டு குடிமகன்கள் ரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள். மேலும் சிலர் மதுபோதையில் அந்த வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்து, தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். இதனால் அந்த வழியாக மாணவ –மாணவிகள் மற்றும் பெண்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே வெள்ளித்திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
ஈரோடு நொச்சிக்காட்டுவலசு பகுதியை சேர்ந்த 30 பெண்கள் உள்பட 50 பேர் கலெக்டரிடம் கொடுத்திருந்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:–
ஈரோடு நொச்சிக்காட்டுவலசு பாலாஜி கார்டன், பண்ணைநகர், கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தற்போது தட்டாந்தோட்டம் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால் குடிமகன்களால், மாணவ –மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தட்டாந்தோட்டம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிடவேண்டும்.

பொது கழிப்பறை
இந்து மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 10–க்கும் மேற்பட்டோர் கை, தலைகளில் கட்டுப்போட்டுக்கொண்டு நூதன முறையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். எனவே அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.

பவானி அருகே உள்ள பெருந்தலையூர் மேற்கு குட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உடனடியாக பொது கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு கொடுத்தனர்.
காற்று மாசுபாடு
சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் விதிமுறைகளை மீறி சில தொழிற்சாலைகள் இயங்கிவருகிறது. இதனால் காற்று மாசுபட்டு பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. எனவே எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை மூடவேண்டும்.’ என்று கூறப்பட்டு இருந்தது.
297 மனுக்கள்
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்தனர். மொத்தம் 297 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய மாவட்ட வருவாய் அதிகாரி லதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி எஸ்.வி.குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் எம்.பாபு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி என்.ராமச்சந்திரன், மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணியம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

Related Tags :
Next Story