தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையால் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையால் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இந்த பருவமழையின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளதடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:– மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய்துறை அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தடையின்றி கிடைத்திட, அந்தந்த பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் தேவையான அளவு இருப்பு இருப்பதை நுகர்பொருள் வழங்கு துறை அலுவலர்கள் உறுதி செய்திடவேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர்
சுகாதாரத்துறை அலுவலர்கள் தேவையான நோய் எதிர்ப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் இருப்பு வைத்திருக்க வேண்டும். மாநகராட்சி, நகரசபை மற்றும் நகர பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தயார் நிலையில் படகுகள்
மாவட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களை பாதுகாத்திட, படகு உள்ளிட்ட பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். கால்நடைத்துறையினர் கால்நடைகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் மருத்துவ மீட்புக்குழுக்களை அமைத்து அவை அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். தென்மேற்கு பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
யார்–யார்?
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி, உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிச்சை, மாவட்ட தீயணைப்பு அலுவலர் தவமணி, உதவி கலெக்டர்கள் கணேஷ்குமார், அனிதா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story