லாட்ஜில் கல்லூரி மாணவி கொலை அழைத்து வந்த வாலிபருக்கு வலைவீச்சு


லாட்ஜில் கல்லூரி மாணவி கொலை அழைத்து வந்த வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Jun 2017 4:45 AM IST (Updated: 13 Jun 2017 11:57 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே லாட்ஜில் கல்லூரி மாணவி, ‘‘சி.எப்.எல். பல்பால்’’ குத்திக்கொலை செய்யப்பட்டார். மாணவியை அழைத்து வந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில் எதிரில் ஒரு லாட்ஜ்(தங்கும் விடுதி) உள்ளது.

இந்த லாட்ஜில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அவளிவநல்லூர் அண்ணாநகரை சேர்ந்த வீரையன் மகன் வி.சுபாஷ்சந்திரபோஷ்(வயது25) என்பவர் ஒரு பெண்ணுடன் வந்து அறை எடுத்து தங்கினார். நேற்று காலை இவர்கள் தங்கியிருந்த அறை கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

நேற்று மாலை வரை அந்த அறை திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் மாற்று சாவியை கொண்டு அறையை திறந்து பார்த்தனர். அப்போது அறையில் உள்ள படுக்கையில் சுபாஷ்சந்திரபோஸ் அழைத்து வந்த பெண், ‘‘சி.எப்.எல். பல்பால்’’ குத்திக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

கல்லூரி மாணவி

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் திருநீலக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பெண் உடலை பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாள அட்டையையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த பெண் கும்கோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்த பாண்டியன் மகள் கீர்த்திகா(19)என்பதும் இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

போலீசார் கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்திகாவை லாட்ஜுக்கு அழைத்து வந்த சுபாஷ்சந்திரபோசை தேடி வருகிறார்கள்.


Next Story