மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:00 AM IST (Updated: 14 Jun 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர்,

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை தாங்கி னார். கூட்டத்தில், புதிதாக கட்டப்பட்ட வீடுகள்-விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க கோரியும், மீட்டர் பெட்டியினுள் ஏற்பட்ட பழுதினை சரி செய்ய வேண்டியும், பயன்படுத்தியதை விட மின்பயனீட்டு அளவினை அதிகப்படியாக மீட்டர் காட்டுவதை சீர் செய்யக்கோருவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்நுகர்வோர் நேரடியாக மேற்பார்வை பொறியாளரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட மேற்பார்வை பொறியாளர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் பெரம்பலூர் இயக்கலும், பராமரித்தலும் செயற்பொறியாளர் தேவராஜ் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story