குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை
குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
வாளாந்தூர் கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி அப்பகுதி கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம், ராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது வாளாந்தூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
அடிப்படை வசதிகள்
எங்கள் பகுதிக்கு இதுநாள் வரை சுத்தமான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி, பொதுக்கழிப்பிடம், சுடுகாட்டு கொட்டகை என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் நாங்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றோம். வாளாந்தூரில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது எங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைவில் எங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெத்தினம், வெங்கடாசலம் ஆகியோர் வாளாந்தூர் கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுவை கிராம மக்கள் அதிகாரிகளிடம் கொடுத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும், மற்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் குறிப்பிட்ட மாதத்திற்குள் தொடர்ந்து நிறைவேற்றப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட வாளாந்தூர் கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story