காமாட்சியம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


காமாட்சியம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 14 Jun 2017 2:43 AM IST (Updated: 14 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பனையூர் காமாட்சியம்மன் கோவிலில் வைகாசி தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

அரிமளம்,

அரிமளம் அருகே கீழப்பனையூர் கிராமத்தில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 4-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் காமாட்சியம்மனை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது வீதியில் கூடி நின்ற பக்தர்கள் காமாட்சியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் அரிமளம், கீழப்பனையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Tags :
Next Story