ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:15 AM IST (Updated: 14 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

வடகாடு,

வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை கண்டித்து, நெடுவாசல் பொதுமக்கள் 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நூதன போராட்டங்களை நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

கண்களில் கருப்பு துணி...

இந்நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 63-வது நாளாக நேற்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மத்திய,மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில், கலந்துகொண்ட பெண்கள், பல மாதங்களாக போராடிவரும் மக்களை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்களில் கருப்பு துணியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story