ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமககள் சாலை மறியல்


ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமககள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Jun 2017 3:22 AM IST (Updated: 14 Jun 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமககள் சாலை மறியல் போககுவரத்து பாதிப்பு

ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரம் அருகே மார்ககம்பட்டியில் 500–ககும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இங்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் போதிய அளவு குடிநீர் இருந்தும், ஊராட்சி நிர்வாகத்தினர் அவற்றை முறையாக வினியோகிக்கவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிககையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமககள் சுமார் 200 பேர் குடிநீர் கேட்டு நேற்று ஒட்டன்சத்திரம்– கரூர் சாலை மார்ககம்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போககுவரத்து பாதிககப்பட்டது. அதன் பின் அங்கு வந்த கள்ளிமந்தயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆழ்துளை கிணறுகளை பார்வையிட்டனர். பின்னர் இரண்டு தினங்களுககுள் முறையாக குடிநீர் வழங்க நடவடிககை எடுககப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமககளின் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story