ஜூலை 1–ந் தேதி முதல் சரக்கு–சேவை வரி அமலுக்கு வருவதால் சட்டசபையில் சித்தராமையா தகவல்


ஜூலை 1–ந் தேதி முதல் சரக்கு–சேவை வரி அமலுக்கு வருவதால் சட்டசபையில் சித்தராமையா தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:45 AM IST (Updated: 14 Jun 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

ஜூலை 1–ந் தேதி முதல் சரக்கு–சேவை வரி அமலுக்கு வருவதால் 20 வணிக வரி சோதனை சாவடிகள் மூடப்படுவதாக சட்டசபையில் சித்தராமையா கூறினார். வணிக வரி சோதனை சாவடிகள் கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் உமேஷ்கத்தி கேட்ட கேள்விக்கு முதல்–மந

பெங்களூரு,

ஜூலை 1–ந் தேதி முதல் சரக்கு–சேவை வரி அமலுக்கு வருவதால் 20 வணிக வரி சோதனை சாவடிகள் மூடப்படுவதாக சட்டசபையில் சித்தராமையா கூறினார்.

வணிக வரி சோதனை சாவடிகள்

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் உமேஷ்கத்தி கேட்ட கேள்விக்கு முதல்–மந்திரி சித்தராமையா பதிலளிக்கையில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் தற்போது 20 வணிக வரி சோதனை சாவடிகள் உள்ளன. இதில் பெலகாவி மண்டலத்தில் மட்டும் 4 சோதனை சாவடிகள் இருக்கின்றன. ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் சரக்கு–சேவை வரி அமலுக்கு வருவதால் இந்த 20 சோதனை சாவடிகளும் ஒட்டுமொத்தமாக மூடப்படுகின்றன. நிலக்கரியை ஏற்றிச் செல்லும் ஏரிகளின் மொத்த எடையை அறிய எடை மேடையை அமைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தொழில் பயிற்சி வழங்கப்படும்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த தொழில் பயிற்சி மற்றும் வாழ்வாதாரத்துறை எனது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இந்த துறை மூலம் இளைஞர்களுக்கு உரிய தொழில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இளைஞர்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் ஏற்கனவே 1.60 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ப தொழில் பயிற்சி வழங்கப்படும்.

ரூ.1,330 கோடி செலவு

இந்த தொழில் பயிற்சி திட்டத்திற்கு ரூ.1,330 கோடி செலவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.160 கோடி ஆகும். மீதியுள்ள தொகையை மாநில அரசு ஒதுக்குகிறது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story