ஓட்டல்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


ஓட்டல்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Jun 2017 4:15 AM IST (Updated: 14 Jun 2017 4:11 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டல்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

 விருதுநகர்,

ஓட்டல்களில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை நகர சபை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனை

விருதுநகர் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவு அதிகாரி ஆகியோர் ஓட்டல்களிலும், தின்பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என எச்சிரித்து இருந்தனர். ஆனாலும் ஓட்டல்களிலும், தின்பண்டங்கள் விற்பனை நிலையங்களிலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து நேற்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் அதிகாரிகள் ஓட்டல்களிலும், தின்பண்டங்கள் விற்பனை நிலையங்களிலும் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் பல நிறுவனங்களில் பயன்பாட்டில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்ததோடு மேல் நடவடிக்கையும் மேற்கொண்டனர்.

இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் உடல்நலக்கேட்டினையும் சுற்றுப்புறசூழலுக்கு கேட்டினையும் விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று. அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story