சேலம் மாமாங்கம் அருகே போக்குவரத்து சிக்னல் கம்பம் மீது அரசு பஸ் மோதி விபத்து
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக திருச்சிக்கு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது.
சேலம்,
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சேலம் மாமாங்கம் அருகே வந்து கொண்டிருந்தது. அங்குள்ள ஓட்டல் அருகே பஸ் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க, பஸ்சை டிரைவர் சாலையின் வலது பக்கம் திருப்பினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் மீது மோதி அதை உடைத்து கொண்டு நின்றது. சத்தம் கேட்டதும் பஸ்சில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், சிக்னல் கம்பம் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story