திசையன்விளை அருகே கடப்பாறை கம்பியால் அடித்து விவசாயி கொலை
திசையன்விளை அருகே கடப்பாறை கம்பியால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்டார்.
திசையன்விளை,
திசையன்விளை அருகே கடப்பாறை கம்பியால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்டார்.
விவசாயி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏறந்தை கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 65). அதே ஊரைச் சேர்ந்தவர் தேவபாலன் (42). இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் சொந்தமான பம்பு செட் தோட்டம் ஏறந்தையில் அருகருகே உள்ளது.
தோட்டத்துக்கு செல்லும் பாதை தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு துரைப்பாண்டி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
கடப்பாறை கம்பியால் அடித்து கொலை
இதனை கவனித்த தேவபாலன், அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். துரைப்பாண்டி தனது தோட்டத்தை சென்றடைந்ததும், தேவபாலன் தான் மறைத்து வைத்திருந்த கடப்பாறை கம்பியால் அவரது பின்னந் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த துரைப்பாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் தேவபாலன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துரைப்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இதுகுறித்து துரைப்பாண்டியின் மனைவி சேர்மக்கனி, திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தேவபாலனை கைது செய்தார். தேவபாலனிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கடப்பாறை கம்பியையும் போலீசார் கைப்பற்றினர். கடப்பாறை கம்பியால் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story