நெல்லையில் கால்நடை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் முறையான பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
நெல்லையில் முறையான பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி கால்நடை டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,

ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு முறையாக வழங்க கோரி தமிழகம் முழுவதும் கால்நடை டாக்டர்கள் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நெல்லை மாவட்டத்திலும் கால்நடை டாக்டர்கள் நேற்று விடுப்பு எடுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடைத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பதவி உயர்வு
கால்நடை உதவி டாக்டர்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்தும், பதவி உயர்வு கிடைக்கவில்லை. தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட அரசாணைப்படி 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வை உறுதி செய்ய வேண்டும். மேலும் சமீபத்தில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் பெற்றவர்களை மீண்டும் பழைய இடத்துக்கே அழைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்க நிர்வாகி மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். இணை செயலாளர் டாக்டர் கல்பத், பொருளாளர் முருகேசன், அம்பை கோட்ட செயலாளர் ராஜ், நெல்லை கோட்ட செயலாளர் அயூப் அலி, சங்கரன்கோவில் கோட்ட செயலாளர் அருள்ராஜ், மகளிர் அணி செயலாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story