தூத்துக்குடி அருகே திடீர் மழை விமானம் தரையிறங்க முடியாமல் திரும்பியது


தூத்துக்குடி அருகே திடீர் மழை விமானம் தரையிறங்க முடியாமல் திரும்பியது
x
தினத்தந்தி 15 Jun 2017 2:00 AM IST (Updated: 14 Jun 2017 7:44 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே நேற்று மதியம் பெய்த திடீர் மழையால் விமானம் தரையிறங்க முடியாமல் திரும்பியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே நேற்று மதியம் பெய்த திடீர் மழையால் விமானம் தரையிறங்க முடியாமல் திரும்பியது.

திடீர் மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவி வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்குமா என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் வழக்கத்துக்கு மாறாக வெயில் அதிகமாக உள்ளது. நேற்று மதியம் கடுமையான வெயில் அடித்தது. திடீரென வானில் மேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்று மதியம் சுமார் 2 மணி முதல் 2–30 மணி வரை பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் பெய்த இந்த மழையால் ரோடுகளில் மழைநீர் தேங்கி கிடந்தது.

விமானம்

அதே நேரத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் விமானம் நேற்று மதியம் 2–20 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்தது. அப்போது பலத்த மழை பெய்ததால் விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக அந்த விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது. மழை நின்ற பிறகு மாலையில் மீண்டும் மதுரையில் இருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடிக்கு 5–25 மணிக்கு வந்து சேர்ந்தது. அதன்பிறகு பயணிகளை ஏற்றிக் கொண்டு 5–55 மணிக்கு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது.

Next Story