ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
கிருஷ்ணகிரி வழியாக ஆந்திராவிற்கு வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வழியாக ஆந்திராவிற்கு வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் கிருஷ்ணகிரி அருகே கனமூர் பஸ்நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி 20 மூட்டைகளில், ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பர்கூர் அருகே உள்ள நேரலகுட்டை கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 40), எமகல் நத்தம் கிராமத்தை சேர்ந்த முருகன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியையும், ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.