பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி இந்து முன்னணி சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகை


பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி இந்து முன்னணி சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 15 Jun 2017 3:00 AM IST (Updated: 15 Jun 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி நகராட்சி அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் பாரபட்சம் இன்றி அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி நகராட்சி அலுவலகத்தை இந்து முன்னணியினர் நேற்று முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய் தனர். இதற்கு நகர தலைவர் பாபு தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

பின்னர் நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) முருகேசனிடம், இந்து முன்னணியினர் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

அகற்ற வேண்டும்

உடுமலை ரோடு மற்றும் தேர்நிலை பஸ் நிறுத்தம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. கடைவீதி, சத்திரம் வீதியில் கடைகளை அமைத்து ஆக்கிரமித்து உள்ளனர். பூ மார்க்கெட்டில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அல்லாது மற்ற ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும்.

இமான்கான் வீதி, காந்திமண்டபம் வீதியில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது. அது போல் மாரியம்மன் கோவில் சாலை, தேர்நிலையம் மார்க்கெட், பூங்காரோடு, காந்தி மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகராட்சி பகுதியில் ஒரு சில பகுதிகளில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. பாரபட்சம் இன்றி அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story