கணவன்–மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு இரட்டை சகோதரர்கள் கைது


கணவன்–மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு இரட்டை சகோதரர்கள் கைது
x
தினத்தந்தி 15 Jun 2017 3:45 AM IST (Updated: 15 Jun 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் ஹாஜியார் தெருவை சேர்ந்தவர் ஜெய்னூலாபூதீன்(வயது47). இவருடைய மனைவி ஜெய்னூலாபீவி(43). ஜெய்னூலாபூதீன் அங்குள்ள மீன்மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

கும்பகோணம்,

கும்பகோணம் ஹாஜியார் தெருவை சேர்ந்தவர் ஜெய்னூலாபூதீன்(வயது47). இவருடைய மனைவி ஜெய்னூலாபீவி(43). ஜெய்னூலாபூதீன் அங்குள்ள மீன்மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இதே மீன்மார்க்கெட்டில் முல்லைநகரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான அசேன்முகமது(35) மற்றும் உசேன்முகமது(35) ஆகிய இருவரும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

சம்பவத்தன்று இரவு இரட்டை சகோதரர்களான அசேன்முகமதும், உசேன்முகமதும் ஜெய்னுலாபூதீன் வீட்டுக்குள் சென்று அவரிடமும், அவரது மனைவியிடமும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவரிடம் இருந்த ரூ.500–ஐ பறித்து சென்று விட்டதாக கூறபபடுகிறது. இது குறித்து ஜெய்னூலாபீவி கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசேன்முகமது, உசேன்முகமது ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story