3 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது
3 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது பொன்.ராதாகிருஷ்ணன் பெருமிதம்
தொடுபுழா,
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சாதனை விளக்க பொதுக்கூட்டம்மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தொடுபுழாவில் நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–
3 ஆண்டுகளில் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்து கற்றுக் கொண்டிருக்கின்றன. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
நலத்திட்டங்கள்விவசாயிகளின் நலன் மீது அக்கறை கொள்ள காரணம் விவசாயிகளின் மீதுள்ள நட்பு தான். பா.ஜனதா ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டங்களை விவசாயிகள் முறையாக பயன்படுத்தாமல் உள்ளனர். இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், இடுக்கி எம்.பி. ஜோய்ஸ்ஜார்ஜ், தொடுபுழா நகர சபை தலைவர் சகியஜப்பார், பா.ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் வேலாயுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர், மத்திய அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 6 வீடுகளின் சாவியை பயனாளிகளுக்கு வழங்கினார். அத்துடன் 25 நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர், பாறகடவு பகுதியில் உள்ள தலித் ஒருவரின் வீட்டுக்கு நிர்வாகிகளுடன் சென்று மதிய உணவு சாப்பிட்டார்.