நெடுவாசலில் வேளாண் கருவிகளை ஏந்தி பொதுமக்கள் போராட்டம்


நெடுவாசலில் வேளாண் கருவிகளை ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:15 AM IST (Updated: 15 Jun 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் பொதுமக்கள் கடந்த மாதம் 12–ந்தேதி முதல் 2–வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர்.

வடகாடு,

வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் பொதுமக்கள் கடந்த மாதம் 12–ந்தேதி முதல் 2–வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், நெடுவாசலில் 64–வது நாளாக நேற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏர், கலப்பை, மண்வெட்டி உள்பட்ட வேளாண் கருவிகளை கையில் ஏந்திக்கொண்டு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story