குளத்தை தூர்வாரியபோது உலோகத்தலான சாமி சிலை கண்டுபிடிப்பு
அறந்தாங்கி அருகே அழியாநிலை பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரும் பணியில் அப்பகுதி பொது மக்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது மண்வெட்டியால் மண்ணை வெட்டியபோது, வித்தியசமான சத்தம் கேட்டது.
அறந்தாங்கி,
அறந்தாங்கி அருகே அழியாநிலை பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரும் பணியில் அப்பகுதி பொது மக்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது மண்வெட்டியால் மண்ணை வெட்டியபோது, வித்தியசமான சத்தம் கேட்டது. இதையடுத்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் ஒன்று சேர்ந்து மெதுவாக மண்ணை நீக்கி பார்த்தனர். அப்போது இதில் உலோகத்தலான சாமி சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அறந்தாங்கி போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்துறையினரிடம் அந்த உலோகத்தலான சாமி சிலையை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story