ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 70 பேர் கைது
சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெரம்பலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 70 பேர் கைது
பெரம்பலூர்,
சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு புதிய பஸ்நிலையத்திற்கு வந்தனர். அங்கு பஸ்நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்களை வெளியே செல்லவிடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க. நகர செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, மதியழகன், நல்லதம்பி உள்பட தி.மு.க. வினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் பாடாலூரில் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சோம.மதியழகன் தலைமையில் தி.மு.க.வினர் திருச்சி- சென்னை நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வேப்பந்தட்டை தாலுகா கைகளத்தூரில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 9 பேர் உள்பட மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் 70 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story