வாலிபருக்கு கத்தி குத்து; போலீசார் விசாரணை


வாலிபருக்கு கத்தி குத்து; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Jun 2017 2:57 AM IST (Updated: 15 Jun 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

வாலிபருக்கு கத்தி குத்து; போலீசார் விசாரணை

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 33). இவரது பக்கத்து வீட்டில் கருணாநிதி (46) வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்துசாமி தனது வீட்டு மனையை நில அளவையரை வைத்து அளந்து கொண்டு இருந்தார். அப்போது வரைபடத்தில் உள்ள சர்வே கல் கருணாநிதியின் வீட்டு முன்பு உள்ள சாலையோரத்தில் இருந்தது. இதில் கருணாநிதி விறகுகளை போட்டு அடுக்கி வைத்திருந்தார். அப்போது முத்துசாமி, நில அளவையர் நிலத்தை அளப்பதற்கு இடையூராக இருப்பதாக கூறி விறகை அகற்றும்படி கருணாநிதியிடம் கூறியுள்ளார். இதற்கு கருணாநிதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கருணாநிதி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் முத்துசாமியை குத்தியுள்ளார். இதில் பலத்தகாயமடைந்த முத்துசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story