‘டைல்ஸ்’ கடை உரிமையாளர் வீட்டின் பீரோவை உடைத்து 22½ பவுன் நகை-ரூ.1½ லட்சம் கொள்ளை
பெரம்பலூரில் பட்டப்பகலில் ‘டைல்ஸ்’ கடை உரிமையாளர் வீட்டின் பீரோவை உடைத்து 22½ பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நான்குரோடு அருகே செல்வாநகர் 5-வது கிராஸ் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் வசித்து வருபவர் சேகர் (வயது 48). இவர் வீட்டின் அருகே அரியலூர் மெயின்ரோட்டில் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி உஷா (38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள், உடும்பியம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி அப்பகுதியிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை சேகர் தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலை காரணமாக கொளக்காநத்தம் பகுதிக்கு சென்று விட்டார். உஷா டைல்ஸ் கடையில் வேலையை கவனித்து கொண்டிருந்தார்.
நகை-பணம் கொள்ளை
இந்த நிலையில் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சேகர் வந்தார். அப்போது வீட்டின் வெளிப்புறக்கதவிலும், உள்பக்க கதவிலும் போடப்பட்டிருந்த பூட்டுகள் காணாமல் போயிருந்தன. இதனால் சந்தேகமடைந்த சேகர் வீட்டினுள் சென்று பார்த்த போது ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 22½ பவுன் நகை, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம், ½ கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசுகள் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், மாரிமுத்து உள்பட போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகியுள்ளனவா? என்பது குறித்து சோதனையிட்டனர். இதற்கிடையே கொள்ளை நடந்த வீட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், துணை போலீஸ் சூப்பிரண்டு குமரவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள வீடு பூட்டியபடி அப்படியே இருந்தது. எனவே சேகர் குடும்பத்தினர் வெளியே செல்வதை நன்கு நோட்டமிட்டு பட்டப்பகலில் கொள்ளை சம்பவத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசில் சேகர் புகார் கொடுத்தார். அதன் பேரில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
பெரம்பலூர் நகருக்குள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அரங்கேறி வரும் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களால் மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடித்து திருட்டு நகை, பணத்தை மீட்டு தர மாவட்ட போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story