செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள் மீது தாக்குதல் வாலிபருக்கு வலைவீச்சு
வேட்டைக்காரனிருப்பில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்களை தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் ராமானுஜம் (வயது51). இவர் நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க படத்தை ஒளிபரப்புவதற்காக இயக்கப்படும் வாகனத்தின் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு நாகையை அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க படங்களை வேன் மூலம் ஒளிப்பரப்பு செய்து கொண்டிருந்தார். அவருடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் ரத்தினகுமார் (29), மின் உதவியாளர் சதீஸ் (29), ஆபரேட்டர் தனமாறன் (44) ஆகியோர் இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அதேபகுதியை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர், எதற்காக இங்கு படம் ஒளிபரப்பு செய்கிறீர்கள்?என்று கேட்டு ராமானுஜத்திடம் தகராறு செய்தார்.
தாக்குதல்
இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து ராமானுஜத்தை தாக்கினார். இதனை தடுக்க வந்த ரத்தினகுமார், சதீஸ் ஆகியோரையும் தாக்கினார்.
இதையடுத்து விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராமானுஜம் அளித்த புகாரின்பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விக்னேசை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இதுபற்றி தகவல் அறிந்த நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஷ்முக், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Related Tags :
Next Story