யார் பேச்சை கேட்பது என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர் அமைச்சர் கந்தசாமி வேதனை
புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே லிங்காரெட்டிப்பாளையத்தில் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
திருக்கனூர்,
இதன் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப்பள்ளியில் அரசின் மதிய உணவு திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பிரதேச காங்கிரஸ் குழு உறுப்பினர் பரமசிவம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவகங்கை வரவேற்றார்.
மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கிவைத்தார். 2016-2017-ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை அமைச்சர் பாராட்டி, பரிசு வழங்கினார்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
விதைப்புல் மானியம்
31 ஆண்டுகளாக இந்த பள்ளியில் மதிய உணவு திட்டம் இல்லை. தற்போது தான் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளி வளர்ச்சிக்காக ரூ.1¼ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சரும், கல்வித்துறை அமைச்சரும் தெரிவித்தனர்.
கரும்பு விவசாயிகளுக்கு விதைப்புல் மானியம், கரும்பு வெட்டுவதற்கு முன்பாகவே வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. சர்க்கரை ஆலையை லாபத்தில் கொண்டுவர முதல்-அமைச்சரிடம் பேசி இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக இருந்த அரசு, கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளது. அதை ஒரே ஆண்டில் சரிசெய்ய சிரமப்பட்டு வருகிறோம்.
விவசாய கடன் தள்ளுபடி
பண மதிப்பிழப்பு, நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டது, பத்திரப்பதிவுக்கு தடை போன்றவற்றால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்கப்படுவதாலும் வருவாய் குறையும்.
விவசாய கடன் தள்ளுபடி கோப்பில் கவர்னர் கையெழுத்து போடாததால் ரூ.22 கோடியை தள்ளுபடி செய்ய முடியவில்லை. இதுபோன்ற பல்வேறு கோப்புகளில் கவர்னர் கையெழுத்து போடாமல் இருக்கிறார். இதேபோல எல்லாவற்றுக்கும் கவர்னர் தடையாக இருக்கிறார்.
மத்திய அரசு நெருக்கடி
மத்திய பா.ஜ.க. அரசு, புதுவை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதால் செயல்பட முடியவில்லை. அரசு அதிகாரிகள் கவர்னர் பேச்சை கேட்பதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பேச்சை கேட்பதா? என்று குழப்பத்தில் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் சாரங்கபாணி, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செந்தில் குமார், ஊமத்துரை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சருடன் வாக்குவாதம்
முன்னதாக விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி காரில் வந்து பள்ளி வளாகத்தில் இறங்கினார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சிலர், இந்த விழாவுக்கு வருவது குறித்து தங்களுக்கு அழைப்பு விடுக்காதது ஏன் என்று கேட்டு, அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் கந்தசாமி சமாதானப்படுத்தி, இனி வரும் காலங்களில் தகவல் தெரிவிப்பதாக கூறினார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story