வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே 36 அடி உயரத்தில் புதிய தடுப்பணை


வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே 36 அடி உயரத்தில் புதிய தடுப்பணை
x
தினத்தந்தி 15 Jun 2017 5:51 AM IST (Updated: 15 Jun 2017 5:51 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 36 அடி உயரத்தில் புதிய தடுப்பணையை கட்டி வருகிறது.

ஆம்பூர்,

வாணியம்பாடி அருகே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 36 அடி உயரத்தில் புதிய தடுப்பணையை கட்டி வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

36 அடி உயரத்தில் புதிய தடுப்பணை

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புல்லூர் வழியாக பாலாறு தொடங்கி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஏற்கனவே 32 தடுப்பணைகளை கட்டியுள்ளன.

இந்த நிலையில் ஆந்திர அரசு, வாணியம்பாடி கும்பம்மிடையில் கங்குந்தி அருகில் பாலாற்றின் குறுக்கே பாலாறு கிராமத்தில் 50 அடி உயரத்தில் மேம்பாலம் அமைக்கிறோம் என்ற பெயரில் கடந்த 32 நாட்களாக பணிகள் நடந்து வருகிறது. இதில் 50 அடி உயரத்திற்கு மேம்பாலம் அமைவதால் கீழே சுமார் 36 அடி அளவிற்கு பாலத்தின்கீழ் தடுப்பணை போல் அமைப்பதால் தண்ணீரை தேக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகிறது.

பாலாற்றின் குறுக்கே பொகிலிரேவிலும் 2 தடுப்பணைகள் உள்ளன. இதில் ஒரு தடுப்பணையின் உயரத்தை 15 அடியில் இருந்து 36 அடியாக உயர்த்தி கட்ட ஆய்வு பணிகள் முடிந்து கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனை தவிர கங்குந்திக்கும் கனேசபுரத்திற்கும் இடையே மற்றொரு தடுப்பணையும் பாலாற்றின் குறுக்கே அமைக்கவுள்ளனர்.

விவசாயிகள் அதிர்ச்சி

இந்த பணிகள் அனைத்தும் 3 மாதங்களில் முடிக்க உள்ளனர். இந்த அணைகள் கட்டப்படுவதால் தமிழகத்தின் வடமாவட்டமான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வடசென்னை ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறும் என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இதனை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்த வேண்டும். இல்லை என்றால் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

ஆந்திர அரசு நூதன முறையில் மேம்பாலம் என்ற பெயரில் புதிய தடுப்பணை அமைப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Next Story