சங்கரன்கோவிலில் துணி உற்பத்தி பாதிப்பு விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
சரக்கு, சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்.
சரக்கு, சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சங்கரன்கோவிலில் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.
சரக்கு, சேவை வரிக்கு எதிர்ப்பு
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமான துணி உற்பத்தி நடந்து வருகிறது.
வருகிற ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் சரக்கு, சேவை வரி விதிப்பை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இதனால் துணி நூல் மற்றும் துணி விற்பனை செய்பவர்களுக்கு 5 சதவீத வரியும், பாவு எடுத்து ஒப்பந்த முறையில் வேலை செய்து கொடுப்பவர்களுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் ஒப்பந்த முறையில் பாவு எடுத்து துணி வகைகளை உற்பத்தி செய்து கொடுப்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலை நிறுத்தம்
எனவே விசைத்தறி உரிமையாளர்கள், இந்த வரிவிதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே வரி விதிப்பை கண்டித்து சங்கரன்கோவில் திருமுருகன் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் ஒருஅடையாள வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் அனைத்து விசைத்தறி கூடங்களும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.
விசைத்தறி தொழிலோடு சம்பந்தப்பட்ட, சாயப்பட்டறைகள், பாவு உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நடைபெறும் இடங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சங்கரன்கோவில் பகுதியில் சுமார் ரூ.1 கோடி வரையிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story