தடைக்காலம் முடந்தததால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


தடைக்காலம் முடந்தததால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 16 Jun 2017 2:00 AM IST (Updated: 15 Jun 2017 7:19 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், தடைக்காலம் முடிந்ததால் விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், தடைக்காலம் முடிந்ததால் விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

தடைக்காலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி கடந்த 61 நாட்களாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகு மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். இந்த பணிகளை முடித்து படகுகளை தயார் நிலையில் வைத்து இருந்தனர்.

உற்சாகமாக...

மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததையொட்டி நேற்று அதிகாலையில் மீனவர்கள் கடலுக்கு படகுகளுடன் புறப்பட்டனர். அதிகாலை சுமார் 4½ மணி அளவில் விசைப்படகுகள் மின்விளக்குகளை ஒளிரவிட்டபடி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைவிட்டு ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்தன. 61 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க செல்வதால் மீனவர்கள் உற்சாகமாவும், அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும் கடலுக்குள் சென்றனர். அவர்களுடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடியில் இருந்து 210 விசைப்படகுகளும், தருவைகுளத்தில் இருந்து 80 விசைப்படகுகளும், வேம்பாரில் இருந்து 33 விசைப்படகுகளும் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்று உள்ளன. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் மீன்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

Next Story